ஜோதிடத்தில், சனி பகவான் கடின உழைப்பு, நீதி மற்றும் ஒழுக்கத்தின் கிரகமாக கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது கிரகங்களுள், சனி நீதிபதியாகவும் முடிவுகளை வழங்குபவராகவும் கருதப்படுகிறார். மேலும் சனி மெதுவாக நகரும் கிரகமாகும். சனி ஒரு ராசியில் சுமார் இரண்டரை வருடங்கள் வரை இருப்பார்.
இந்த வகையில் பார்க்கும் போது சனியின் தாக்கம் ஒரு நபரின் வாழ்க்கையில் மூன்று முறை இருக்கும். சனி பகவனான் தற்போது அவரது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்துள்ளார். 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி சனி பகவான் தனது இரண்டரை வருட பயணத்தை கும்ப ராசியில் முடித்து கொள்கிறார். சனியின் இந்த ராசி மாற்றம் 2025-ம் ஆண்டு வியாழனின் ராசியான மீனத்தில் நடக்கும். சனி மீன ராசியில் நுழையும் போது மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் ஏழரை சனி தொடங்கும் அதே நேரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவடையும். சனி பகவானின் இந்த மாற்றத்தின் போது சில ராசியினர் மீது வெள்ளி பாதத்தில் நுழைகிறார்.
சனி பகவான் பொதுவாக நான்கு பாதங்களை கொண்டு விளங்குகிறார். அதாவது தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகியவையே அந்த பாதங்கள். குறிப்பிட்ட வீடுகளில் சனி பகவான் சஞ்சரிக்கும் போது இந்த பாதங்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது. ஒரு ராசியின் இரண்டாம் அல்லது ஐந்தாம் அல்லது ஒன்பதாம் வீட்டில் சனி பகவான் செல்லும் போது வெள்ளி பாதம் உருவாகிறது. இதனால் அந்த ராசியினரின் வாழ்வில் அதிர்ஷ்டம் அதிகரிக்க போகிறது, அந்த ராசிகள் யார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
கடகம்: மார்ச் 29, 2025 அன்று, சனி மீன ராசிக்கு மாறும்போது, கடக ராசியில் சனி ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். இதன் மூலம் சனி பகவான் இந்த ராசியின் வெள்ளி பாதத்தில் நுழைவார். சனிபகவான் வெள்ளி பாதத்தில் இருப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள்.
பொருளாதார வளம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போதைய வேலையில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபமும், கடின உழைப்பின் முழு பலனும் கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசியில் வெள்ளி பாதத்துடன் சனி பகவான் ஐந்தாம் வீட்டில் நுழைகிறார். லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல செய்திகள் அவ்வப்போது வந்து சேரும். இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும் மற்றும் நிதி ஆதாயத்திற்கான பொன்னான வாய்ப்புகள் இருக்கும்.
கும்பம்: 2025-ம் ஆண்டு சனியின் வெள்ளி பாதம் கும்ப ராசியின் மீது அமர்வதால் பல நன்மைகளைப் பெறுவார்கள். 2025ஆம் ஆண்டு மீன ராசியில் சனியின் சஞ்சாரம் கும்ப ராசியின் இரண்டாம் வீட்டில் இருக்கும். கடின உழைப்பின் அடிப்படையில், கும்ப ராசிக்காரர்கள் வேலை அல்லது வியாபாரத்தில் நல்ல சாதனைகளை அடைவார்கள். வெள்ளி ஸ்தானத்தில் சனியின் வருகையால் நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் நிறைவேறும். திடீர் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும்.