2025ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. இதன் காரணமாக எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
மிதுன ராசி:
மிதுன ராசிக்கு டிசம்பர் மாதத்தில் கூடுதல் கவனமாக எதிலும் செயல்பட வேண்டியது அவசியம். உங்கள் வேலை தொடர்பான விஷயத்தில் தேவையற்ற பிரச்னைகளும், வேலையை முடிப்பதில் சிரமங்களையும் சந்திக்க வேண்டியது இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உங்கள் வேலையை முடிப்பதில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
கடக ராசி:
கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் பல விதத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் வேலைகளை முடிப்பதில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். மேலும் வேலை தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கும். இந்த மாதத்தில் சில நிதி சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கும்.
கன்னி ராசி:
டிசம்பர் மாதத்தில் கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு பலவேறு சூழல்களில் பிரச்சனைகள் உருவாகும். இந்த பிரச்னைகளை சமாளிக்க வேண்டிய நிலை இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடினமான மாதமாக இருக்கும் என்பதால் பொறுமையுடன், நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
தனுசு ராசி:
தனுசு ராசியி சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் குடும்பம் மற்றும் பணியிடத்தில் கூடுதல் கவனத்துடனும், அனுசரித்தும் செல்வது நல்லது. உங்கள் மீது விமர்சனங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேறத்திற்கான முயற்சியில் ஈடுபடவும். சொந்த தொழிலில் முதலீடு விஷயத்தில் கவனம் தேவை.