டிசம்பர் மாதம் ஐந்து குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகவும் சிறப்பாக அமையக்கூடும். ஜோதிடக் கணிப்பின்படி, 2024 டிசம்பர் மாதம் கன்னி, மேஷம், துலாம், சிம்மம் மற்றும் மீனம் ஆகிய ஐந்து ராசிகளுக்கு மிகவும் சிறப்பாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஐந்து ராசிகள் எவை என்பதை கீழே பார்ப்போம்:-
கன்னி: புத்திசாலித்தனம் மற்றும் விசுவாசம் கொண்ட கன்னி ராசியினர், டிசம்பரில் பல நல்ல செய்திகளை கேட்கும் வாய்ப்பு உள்ளது. தொழில், குடும்பம் அல்லது உறவினர்கள் மூலம் அவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். கடின உழைப்பிற்கான பலனையும் அவர்கள் அடைவார்கள்.
மேஷம்: வைராக்கியம் மிக்க மேஷ ராசியினர், டிசம்பரில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகளை முடித்து வெற்றி பெறுவார்கள். வருமானம் அதிகரித்து, சுயமரியாதை உயரும்.
துலாம்: சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்ற துலாம் ராசியினர், டிசம்பரில் கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தைப் பெறுவார்கள். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம்: தலைமைத்துவ குணம் கொண்ட சிம்ம ராசியினர், டிசம்பரில் நீண்ட காலமாக எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். வெளியில் கொடுத்திருந்த நிலுவைத் தொகை கைக்கு வரும்.
மீனம்: தான தர்மங்களில் ஆர்வம் கொண்ட மீன ராசியினர், டிசம்பரில் வாழ்வில் நினைத்ததை அடைய போராடும் காலமாக அமையாமல், இதுவரை பாடுபட்ட அனைத்து கடின உழைப்பிற்கும் சிறந்த பலன் கிடைக்கும். வருமானம் அதிகரித்து, புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு உருவாகும்.