2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிகப்படியான நன்மைகள் யாருக்கு கிடைக்கும்? ராசிகளின் விவரத்தை இங்கே காணலாம்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. சுப பலன்களை அளிக்கும் குரு பகவான் சுமார் 1 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். அவர் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். மே மாதம் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இந்த காலகட்டம் சில ராசிக்காரர்களுக்கு பொற்காலமாய் அமையும். இவர்கள் நினைத்தது அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிடத்தில், ஒன்பது கிரகங்களில், குரு பகவானுக்கு மிக முக்கியமான இடம் உள்ளது. குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு சுமார் 1 1/2 ஆண்டுகள் ஆகும். கல்வி, செல்வம், திருமண வாழ்க்கை, குழந்தைகள் என பல வித சுப விஷயங்களுக்கு குரு பகவான் காரணி கிரகமாக இருக்கிறார்.
குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். அவர் 2025 ஆம் ஆண்டு மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். 2025 ஆம் ஆண்டு குரு தனது ராசியை 3 முறை மாற்றுவார். முதலில் 2025 மே 14 அன்று மிதுனத்தில் குரு பெயர்ச்சி நடக்கும். இதற்குப் பிறகு, அக்டோபர் 18, 2025 அன்று, அவர் தனது உச்ச ராசியான கடக ராசிக்கு நகர்ந்து, ஆண்டின் இறுதியில் அதாவது டிசம்பர் 5 ஆம் தேதி மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைவார்.
குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பழைய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உயர்கல்விக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்: குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகம் மற்றும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை வரம் கை கூடும். அனைத்து வேலைகளிலும் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிகப்படியான நன்மைகளை அளிக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளை பெறுவீர்கள். பதவி உயர்வும் ஊதிய ஊயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
தனுசு: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாய் இருக்கும். பல நன்மைகளைப் பெறுவார்கள். வியாபாரத்தில் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் இருக்கலாம். வியாபாரத்தில் அபரிமிதமான நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. நிலம், வீடு வாங்கும் கனவு நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் உண்டாகும். பல நல்ல செய்திகள் கிடைக்கும்.
கும்பம்: குரு பகவானின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். புதிய வேலைக்கான தேடல் முடியும். வருமானம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். பிள்ளைகளுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
சுப கிரகமான குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு 13 மாதங்கள் ஆகும். குரு பெயர்ச்சி மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.