கடந்த மாதம் தங்கம் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் பணிநாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது.
நேற்று (02.12.2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.60 குறைந்து, ரூ.7,090-க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.56,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று (03.12.2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.40 அதிகரித்து, ரூ.7,130-க்கும், ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ரூ.57,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.