டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையில் நேற்று (02.01.24) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,180-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 57,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (03.01.24) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் 7,260-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல்,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,995-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.47,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.