டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (23.12.24) சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி அதே விலை தொடர்கிறது.
கடந்த சனிக்கிழமை (21.12.24) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.7,100க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (23.12.24) ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ.56,800க்கும், ஒரு கிராம் ரூ.7,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.5,865க்கும், ஒரு சவரன் ரூ.46,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.99க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.