தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் தங்கம் விலையில் இன்று எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்களும் ஒரே விலையில் விற்பனை ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு பிறந்தது முதல் அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தங்கம் விலை உயர்ந்த நிலையில் திடீரென நான்காம் தேதி தங்கம் விலை இறங்கியது. அன்றைய தினம் 7215 ரூபாய் என ஒரு கிராம் விற்பனையான நிலையில் அதே விலையில் தான் இன்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலைமாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 7,215 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 57,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.