இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் முறையாக விலை உச்சத்தை எட்டியுள்ளது.
நேற்று (ஜன.22ஆம் தேதி) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஒரே நாளில் எகிறியது. வரலாற்றில் முதல் முறையாக ரூ.60,000-ஐ தாண்டியது தங்கம் விலை. ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.7,525க்கும், ஒரு சவரன் ரூ.600 அதிகரித்து ரூ.60,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜன.23ஆம் தேதி) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.7,525க்கும், ஒரு சவரன் ரூ.60,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,205க்கும், ஒரு சவரன் ரூ.49,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.104க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.