உலகம் முழுவதும் பல்வேறு மாடல்களில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் ஓப்போ நிறுவனம் தனது புதிய OPPO Find X8 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் OPPO Find X8 மற்றும் OPPO Find X8 Pro ஆகிய இரண்டு வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது. இதன் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட வேரியண்டின் விலை ரூ.1 லட்சம் வரை வருகிறது. கிட்டத்தட்ட ஐஃபோன் விலைக்கு நெருக்கமாக உள்ள இதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.
OPPO Find X8 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
- 6.59 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
- 3.63 GHz ஆக்டோகோர் ப்ராசஸர்
- மீடியாடெக் டைமென்சிட்டி 9400 சிப்செட்
- 12 GB / 16 GB RAM
- 256 GB / 512 GB இண்டெர்னல் மெமரி
- மெமரி கார்டு ஸ்லாட் கிடையாது
- 50 MP + 50 MP + 50 MP ட்ரிப்பிள் ப்ரைமரி OIS கேமரா
- 32 MP முன்பக்க செல்பி கேமரா
- 4ஜி, 5ஜி, ப்ளூடூத் 5.4, வைஃபை, யூஎஸ்பி டைப்-சி
- 5630 mAh பேட்டரி, 80 W ஃபாஸ்ட் சார்ஜிங்,
- 50 W மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்
இந்த OPPO Find X8 ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் ப்ளாக் மற்றும் ஸ்டார் க்ரே ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.69,999 ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.79,999 ஆகவும் உள்ளது.
OPPO Find X8 Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
- 6.78 இன்ச் LTPO அமோலெட் டிஸ்ப்ளே
- 3.63 GHz ஆக்டோகோர் ப்ராசஸர்
- மீடியாடெக் டைமென்சிட்டி 9400 சிப்செட்
- 16 GB RAM
- 512 GB இண்டெர்னல் மெமரி
- மெமரி கார்டு ஸ்லாட் கிடையாது
- 50 MP + 50 MP + 50 MP + 50 MP குவாட் ப்ரைமரி OIS கேமரா
- 32 MP முன்பக்க செல்பி கேமரா
- 4ஜி, 5ஜி, ப்ளூடூத் 5.4, வைஃபை, யூஎஸ்பி டைப்-சி
- 5910 mAh பேட்டரி, 80 W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்,
- 50 W வயர்லெஸ் சார்ஜிங், 50 W ரிவர்ஸ் சார்ஜிங்
இந்த OPPO Find X8 Pro ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் ப்ளாக் மற்றும் பெர்ல் வொயிட் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.99,999 ஆக உள்ளது.