கடந்த ஆண்டு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தும் இதே நிலையே நீடிக்கிறது.
நேற்று (09.01.24) ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7260க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.58,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (10.01.24) ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7285க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.58,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல்,18 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6010க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 48,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் வெள்ளி விலை, ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து கிராம் ரூ.101-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.