தங்கம் விலை கடந்த 19ஆம் தேதி குறைந்த நிலையில் 5 நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் குறைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
நேற்றைய விலையில் இருந்து இன்று தங்கம் ஒரு கிராம் 10 ரூபாயும் ஒரு சவரன் 80 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 7,090 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 56,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,735 எனவும் ஒரு சவரன் ரூபாய் 61,880 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 99.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.