இறால் மீன்களில் சிங்கி இறால் வகைகளில் நல்லகொழுப்பு, அயோடின் முதலான சத்துகள் உண்டு. இவை உடல் வளர்ச்சிக்கு உகந்தது. சுவையான இறால் மிளகு வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்: இறால்- கால் கிலோ, பூண்டு(பொடியாக நறுக்கியது)- 6 பல், பச்சை மிளகாய்-3, மிளகு 15, கறிவேப்பிலை- சிறிதளவு, சீரகத்தூள், மஞ்சள்தூள்- தலா அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப.
செய்முறை: சுத்தம் செய்த இறாலுடன், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இத்துடன் ஊறவைத்த இறால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி மூடிபோட்டு வேகவிடவும். இறாலில் ஏற்கெனவே தண்ணீர் இருப்பதால் மீண்டும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. இறால் நன்றாக வெந்ததும் மிளகை ஒன்றிரண்டாக பொடித்து தூவி நன்கு புரட்டி இரண்டு நிமிடம் விட்டு இறக்கவும். இப்போது சுவையான இறால் மிளகு வறுவல் ரெடி.