நீங்கள் நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க காலை உணவு மிகவும் அவசியம். அதுவும் மிக சத்தான காலை உணவு என்பது உங்களை சக்தியுடன் இயங்க வைக்கும். அந்தவகையில் சுவையான, ஆரோக்கியமான வெஜிடபிள் ஊத்தப்பம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
தேவையானவை: இட்லி அரிசி – 300 கிராம், உளுந்து – 100 கிராம், உப்பு தேவையான அளவு, கோஸ் துருவல், காரட் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய் – வெங்காயம் – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிது அளவு, பச்சை மிளகாய் 1, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்தை தனித்தனியே ஊறவைத்து தோசைக்கு அரைப்பதுபோல் அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும்.
சிறிது எண்ணெயில் காய்கறிகளை லேசாக வதக்கி மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
காய்ந்த தோசைக் கல்லில் ஊற்றி வெந்ததும் எடுத்தால் சுவையான வெஜிடபிள் ஊத்தப்பம் ரெடி!