காய்கறிகள் சேர்த்த வித்தியாசமான வெஜிடபிள் வடை செய்வது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு – 200 கிராம்,
கேரட் துருவல், கோஸ் துருவல்,
பொடியாக நறுக்கிய குடமிளகாய்,
பச்சைப் பட்டாணி – தலா ஒரு கப்,
புதினா – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 2,
எண்ணெய் – 250 மில்லி,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து மைய்ய அரைக்கவும். மாவுடன் கேரட் துருவல், கோஸ் துருவல், குடமிளகாய், புதினா, பட்டாணி சேர்த்துப் பிசையவும். பின்னர் வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை சிறிய வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: அவரவர் விருப்பப் படி பிடித்த காய்களை பொடி யாக நறுக்கி சேர்த்து வடை தயாரிக்கலாம். இந்த வடைக்கு சில்லி சாஸ், தக்காளி சாஸ் அருமையாக இருக்கும்.