சிக்கன் சில்லி சாப்பிட்டு பார்த்திருப்பீங்க. ஆனால் சுவையான இந்த சைவ சில்லி பிரட் போன்றவற்றை சாப்பிட்டதுண்டா? ஒரு முறை இந்த மாதிரி பிரட் வைத்து சில்லி பிரட் காரசாரமா ருசியா செஞ்சி பாருங்க, எல்லோருமே திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. காரசாரமான பிரெட் சில்லி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாண்ட்விச் பிரட் – 5
எண்ணெய் – தேவையான அளவு
பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
குடைமிளகாய் – ஒன்று
பச்சை மிளகாய் – இரண்டு
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – முக்கால் ஸ்பூன்
சில்லி பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயத்தாள், வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
கான்பிளவர் மாவு – ஒன்றரை ஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
செய்முறை :
20 மிளகாய்களை மூழ்கும் அளவு தண்ணீரில் 15 நிமிடம் வேக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் வற்றியதும் மிளகாயை ஆறவைத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரத்தில் இருக்கும் பகுதிகளை வெட்டி எடுத்து விட வேண்டும். பிரெட்டை சதுர சதுரமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் விட்டு பிரட் துண்டுகளை சேர்த்து எல்லா புறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பொடிதாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
கலவை வதங்கியதும் வினிகர், சோயா சாஸ், சில்லி பேஸ்ட் சேர்த்துக்கொள்ள வேண்டும். வினிகர் இல்லை என்றால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். இவைகளை வதக்கி விட்டு தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தாளுடன் கூடிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
ஒரு ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து இதில் சேர்க்க வேண்டும். கிரேவி பதத்திற்கு கெட்டியாக வந்ததும், வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து மசாலா பிரெட்டில் ஊரும் அளவிற்கு நன்கு கலந்து விட வேண்டும். இதில் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கினால் சுவையான சில்லி பிரெட் தயார்.