தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள நவ கோபுரங்களையும் ராட்சத வாகனம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த விழாவில் 15 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் உள்ள ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் உள்ளிட்ட நவ கோபுரங்களையும் தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
கோபுரங்களில் உள்ள சிறு சிறு செடிகளை அகற்றியும், புறா எச்சங்களை தூய்மைப்படுத்தியும் கோபுரங்களை தூய்மைப்படுத்தினர்.