கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலையிட்டு இருமுடி கட்டி சபரிமலை நோக்கி செல்லும் பக்தர்கள் ஏராளம்.சாமியே சரணம் ஐயப்பா முழக்கங்களை அதிகமாக நாம் காண முடியும்.உள்ளம் உருகி விரதம் இருந்து சபரிமலையை ஐயப்பனை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் செல்வதுண்டு.
சபரிமலை செல்லும் போதெல்லாம் சிறுவழிப்பாதை பெருவழிப்பாதை என்ற சொல்லாடல்களை நாம் கேள்விப்பட்டிருப்போம்.ஏன் அப்படி சொல்கிறார்கள் என்ன வித்தியாசம் என்பதை முழுமையாக விளக்கிறது இந்த செய்தி தொகுப்பு
சப்த சிரஞ்சீவிகளில் ஒருவரான பரசுராமரால் உருவாக்கப்பட்டதே சபரிமலை ஐயப்பன் கோயில். கேரள மாநிலத்தின் மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில், சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்திருக்கிறது. இனிய காற்று, இதமான சுவாசம் யாவும் அளிக்கும் சபரிமலை யாத்திரை ஒரு மருத்துவச் சுற்றுலாவாகவும் இருக்கிறது.
பெருவழிப்பாதை : இந்தப் பாதையை ஐயப்பன் யாத்திரைக்காக சென்ற பாதை என்றும் கூறுவார்கள் எரு மேலி,பேரூர் தோடுபயணிக்கும் பாதையாகும்.பெருவழிப்பாதையில் சென்றால்தான் ஐயப்ப யாத்திரையே பூர்த்தியாகும்’ என்று மூத்த ஐயப்ப பக்தர்களால் கூறப்படுகிறது.
ஆண்டாண்டுகாலமாக இந்தப் பாதையே இருப்பதால், சிறிய பாதையில் பயணிப்பது ஐயப்பனை தரிசிக்க வேண்டுமானால் உதவும். ஆனால், நிஜமான ஆத்ம திருப்தி கிடைக்க பெரிய பாதையே சிறந்தது என்கிறார்கள். இதனால் ஆபத்துகள் பல நிறைந்திருந்தபோதும் பெரும்பாலான பக்தர்களால் இந்தப் பாதை விரும்பப்படுகிறது.இவற்றைக் கடந்தால் பம்பை நதி குறுக்கிடும். இங்கு நீராடி, பூஜைகள் செய்த பின்னரே யாத்திரையைத் தொடங்குவார்கள். இங்கிருந்து தொடங்குவதுதான் சிறிய பாதைப் பயணம்.
சிறு வழி பாதை: பம்பையில் நீராடி, பள்ளிக்கட்டுகள் ஏந்தித் தொடங்கும் இந்தச் சிறிய வழிப்பாதையில் ஆபத்துகள் அதிகம்தான். பெருவழிப்பாதையில் செல்வதுதான் சிறந்தது என்றாலும், பல மைல்களைக் கடந்து செல்லும் அளவுக்கு தற்போது பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை என்பதே உண்மை. அதனால், இப்போது பம்பையில் இருந்து தொடங்கும் சிறிய வழிப்பாதையும் பலரால் விரும்பப்படுகிறது. நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கும் இந்தப் பாதையே எளிதாகவும் இருக்கிறது.
கன்னி மூல கணபதியை வணங்கிவிட்டுத் தொடரும் இந்தப் பயணத்தில் முதலில் வருவது நீலிமலை ஏற்றம். கருங்கல் படிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், இந்தப் பயணம் மிகுந்த சிரமம் கொடுக்கக்கூடியதே. இதனால் பக்தர்கள் இங்கு வந்ததும் தங்களது களைப்பைப் போக்கிக்கொள்ள, சரண கோஷங்களை அதிகம் எழுப்புவார்கள். எரிமேலியில் பேட்டைத் துள்ளிய கன்னிசாமிகள் தாங்கள் கொண்டுவரும் மரத்தாலான வில், வேல், சரம் போன்றவற்றை இங்கு குத்திவைத்து வணங்குகிறார்கள்.
சரங்குத்தி கடந்தால் வருவது சபரிமலை ஸ்ரீசாஸ்தாவின் பதினெட்டுப்படிகள். படிகளைக் கடந்து பரவசநிலையில் ஐயன் ஸ்ரீஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள், தாங்கள் கடந்துவந்த வலிகள், துயரங்களை எல்லாம் மறந்து எழுப்பும் சரணகோஷத்தில் மலையே அதிரும். மனமோ நிறையும். ஒருமுறை வந்தவர்கள் எல்லோரும் திரும்ப, திரும்ப இந்த சந்நிதானத்துக்கு வருவது எல்லாம் இந்த அற்புதப் பயண அனுபவத்தால்தான் என்று சொல்லலாம்.