சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 9 நாட்களில், 6 லட்சத்து 12 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரசாந்த், “மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை வரை 6 லட்சத்து 12 ஆயிரத்து 290 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மூன்று லட்சத்து மூவாயிரத்து 501 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்” என்றும் கூறியுள்ளார். பிரசாத விற்பனை, தங்கும் விடுதிக்கான கட்டணம், காணிக்கை ஆகியவை மூலம் இதுவரை 41 கோடியே 60 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எருமேலி, பம்பை உள்ளிட்ட ஸ்பாட் புக்கிங் மையங்களில் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையை மட்டும் கொண்டு முன்பதிவு செய்து தரிசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் பிரசாந்த் தெரிவித்தார்.