மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்திருக்கும் இந்த பித்தப்பை உணவு செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்துக்கொள்ளும் ஒரு தனி அறை தான் இந்த பித்தப்பை.
நாம் உண்ணும் உணவு செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கும் நிலையில் அந்த அமிலம் பலவகை பொருட்களால் ஆனது. கொழுப்பு, பித்த, உப்பு ஆகியவை கலந்து இருக்கும் நிலையில், அதை குடல் வழியாக நம் உணவோடு பித்தப்பை சேர்த்து விடும்.
இந்த நிலையில் உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உருவாவதால் பித்தப்பை காலியாக இல்லாமல் கல் சேர்ந்து விடும். இதனை குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
பித்தப்பை கல்லை அகற்றுவதற்கு ஆப்பிள் ஜூஸ் அல்லது ஆப்பிள்களை சாப்பிட்டு வந்தால் சரியாகும். மேலும் ஆலிவ் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு கலக்கி குடித்தால் பித்த குழாய் வழியாக கற்கள் வெளியேறிவிடும்.