குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் பளபளப்பு குறைவாக இருக்கும். இதனை சரி செய்ய வீட்டில் தயார் செய்யக்கூடிய சில பேஸ் பேக் உதவிகரமாக இருக்கும்.
குளிர்காலத்தில் நமது சருமம் மிகவும் வறண்டு, பளபளப்பாக இல்லாமல் இருக்கும். ஒரு பார்ட்டி அல்லது திருமணத்திற்கு செல்லும் முன் உங்கள் சருமம் பொலிவாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமெனில், பின்வரும் இந்த ஃபேஸ் பேக்குகளை வீட்டிலேயே முயற்சி செய்யலாம். அவை உங்கள் சருமத்தை இயற்கையாக பளபளக்க உதவும். பொதுவாக திருமண சீசன் நவம்பர் முதல் ஜனவரி வரை நடக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல நேரிடும். இந்த விசேஷ நாட்களில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் மிகவும் அழகாகவும் ஆடம்பரமாகவும் இருக்க விரும்புகிறார்கள். இதற்கு சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டும்.
சில சமயங்களில் அது நாம் விரும்பும் அளவுக்கு பிரகாசமாகவும் பளபளப்பாகவும் இருக்காது. மக்கள் தங்கள் சருமத்தை பளபளப்பாகவும், பளிச்சென்றும் வைத்துக்கொள்ள பல்வேறு வகையான ஃபேஷியல் மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் பிஸியான உலகில் பார்லருக்கு செல்ல நேரம் இல்லாத நபர்கள் வீட்டிலேயே பேஸ் பேக்குகளை எளிதாக தயார் செய்து முகத்திற்கு தடவலாம். முக்கிய விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முன்பு இந்த பேஸ் பேக்குகளை பயன்படுத்தினால் உங்கள் சருமம் இயற்கையாக பளபளப்பாக இருக்கும்.
காபி தூள் மற்றும் தேங்காய் எண்ணெய்
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு காபி பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட ஃபேஸ் மாஸ்க் நல்லது. காபி தூள் இறந்த சருமத்தை நீக்கி, உங்கள் சருமத்தை பிரகாசமாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. இந்த பேஸ் பேக்கை உருவாக்க, 1 டீஸ்பூன் காபி பொடியை எடுத்து, அதே அளவு தேங்காய் எண்ணெயுடன் மென்மையாகும் வரை கலக்கவும். பின்னர், அதை உங்கள் முகத்தில் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்து தண்ணீரில் முகத்தை சுத்தம் செய்யவும்.
தேன் மற்றும் காபி
உங்கள் சருமத்தை பளபளக்க தேன் மற்றும் காபியைப் பயன்படுத்தி உங்கள் முகத்திற்கு ஒரு சிறப்பு பேஸ்பேக்கை நீங்கள் செய்யலாம். காபி முகத்தில் உள்ள இறந்த சருமத்தை நீக்க உதவுகிறது, மேலும் இது கரும்புள்ளிகள் மற்றும் சன் டான் ஆகியவற்றிற்கு உதவுகிறது. உங்கள் சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க தேன் சிறந்தது. இந்த பேஸ்பேக்கை உருவாக்க, 2 சிறிய ஸ்பூன் காபி தூள், 2 சிறிய ஸ்பூன் தேன் மற்றும் 1 சிறிய ஸ்பூன் பச்சை பால் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் அவற்றை ஒன்றாக கலக்கவும். பின்னர், இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, மசாஜ் செய்து சுத்தம் செய்யவும்.