நாம் தினசரி உட்கொள்ளும் காய்கள் மற்றும் பழங்களில் பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. அப்படி பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு பழம்தான் நெல்லிக்காய். நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆண்டிஆக்சிடெண்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் உட்கொளவ்து ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
குறிப்பாக குளிர்காலத்தில் நெல்லிக்காய் உட்கொள்வதால் பல வித நன்மைகள் கிடைக்கின்றன. இது முக்கியமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. குளிகாரல்த்தில் நெல்லிக்காய் உட்கொள்வதால் கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது:
நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக பருவகால நோய்கள் மற்றும் தொற்று நோய்களிலிருந்து உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. இது தவிர, நெல்லிக்காயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள், செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன.
செரிமானத்தை மேம்படுத்தும்:
நெல்லிக்காயை உட்கொள்வது செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மை போன்ற வயிற்று பிரச்சனைகளை போக்க உதவுகிறது. இது தவிர, நெல்லிக்காய் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது செரிமானத்தை மேலும் மேம்படுத்துகிறது.
சுருக்கங்கள், தழும்புகள் நீங்கும்:
நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு குடிப்பது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது சருமத்தில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது. தோலில் தோன்றும் சுருக்கங்கள் மற்றும் முகத்தில் தோன்றும் முகப்பரு, மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கவும் இது உதவுகிறது.
கூந்தல் ஆரோக்கியம்:
நெல்லிக்காய் கூந்தலுக்கு இயற்கையான ஒரு தீர்வாக பார்க்கப்படுகின்றது. இது கூந்தலை வலுவாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து கூந்தலின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. இது முடி உதிர்வதை குறைக்கிறது. இதுமட்டுமின்றி நெல்லிக்காயினால் பொடுகு பிரச்சனைகளும் நீங்கும்.
எடை இழப்பு:
உடல் பருமனால் அவதியில் உள்ளவர்களுக்கும் நெல்லிக்காய் சிறந்தது. நெல்லிக்காய் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது தவிர, இது உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றது. இது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.