உடலை தாங்கி நிற்கும் கால்களில் நாம் கவனம் செலுத்துகிறோமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வோம். 2 தசாபதங்களாக கால்களின் தோற்றத்தை பொலிவாக வைத்திருக்க பெடிக்யூர் செய்யப்படுவதுண்டு. நாளடைவில் அவை பாதங்களின் ஆரோக்கியம் காக்கும் வகையில் தொற்று சேராமல் அழுக்கு நீக்குகிறது என்பதை உணர்ந்து பலரும் இதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.
மற்றொரு புறம் நீரிழிவு நோயாளிகளுக்கு வரக்கூடிய பாதப்புண்களை கண்காணிக்க சீரான பரிசோதனையை செய்பவர்களும் இருக்கிறார்கள் ஆனால் இவர்களை தாண்டி பெரும்பாலானவர்கள் பாதங்கள் ஆரோக்கியம் குறித்து போதுமான விழிப்புணர்வை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பாதங்களின் கீழ் வரும் வெடிப்புகளில் தான் பாதங்களின் ஆரோக்கிய குறைபாடு தொடங்குகிறது. இந்நிலையில் இந்த பாத வெடிப்புகளை போக்க உதவும் வீட்டு வைத்தியம் ஒன்றை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றில் பார்க்க நேர்ந்தது. அப்படி என்ன வைத்தியம் சொல்லப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
பாதவெடிப்புக்கு காரணம் என்ன?
அகன்ற கிண்ணத்தில் பேஸ்ட் ஒன்றை சிறிதளவு சேர்த்து சர்க்கரை பொடித்து சிறிதளவு சேர்த்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். பிறகு வாசிலைன் சிறிது சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து விடவும். இந்த க்ரீம் பதத்தில் இருக்கும் பேஸ்ட்டை எடுத்து பாதங்களில் நன்றாக தடவி விடவும். பிறகு அவை உலர்ந்த பிறகு அந்த பேஸ்ட்டை உரித்து எடுக்கவும் என்று சொல்லப்பட்டுள்ளது.
பாதங்களில் வெடிப்பு தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
1.பாதங்களில் அடிக்கடி வெடிப்பு தவிர்க்க எப்போதும் ஷூ போடலாம்.
2.குறைந்தது செருப்பு அணியாமல் வெளியே செல்லகூடாது.
3.தினசரி இரண்டு கால்களை பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
4.பாதங்களில் வறட்சி ஏற்படாமல் தடுக்க மாய்சுரைசர் செய்வது அவசியம்.
பாதங்களில் வெடிப்பு இருக்கும் போது தேங்காயெண்ணெயும் வாசிலைன் இரண்டும் நன்மை செய்யும். சருமத்தை மாய்சுரைசராக வைத்திருக்கும். ஆனால் இலேசான வெடிப்புகளுக்கு மட்டுமே இவை பொருந்தும், தொற்று மிக்க வெடிப்புகள், புண் போன்றவற்றுக்கு இந்த சிகிச்சை கண்டிப்பாக பலன் அளிக்காது.