இந்த நாட்களில் இதய கோளாறுகள் பலருக்கு ஏற்படுவதை காண்கிறோம். இதய நோய்களைத் தவிர்க்க, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். ஏனெனில், கொலஸ்ட்ராலுக்கும் நமது இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது.
எல்டிஎல் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. மாரடைப்புக்கு கொலஸ்ட்ராலும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. குறிப்பாக குளிர்காலத்தில், கொலஸ்ட்ராலின் சமநிலை சீராக இல்லாமல் இருந்தால், இதய நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில அறிகுறிகளை வைத்து நமது இதயத்தின் ஆரோக்கியத்தை நாம் உறுதி செய்துகொள்ளலாம்.
மாரடைப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் என்ன தொடர்பு?
உடலில் எல்டிஎல் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால், அது தமனிகளில் பிளேக்கை உருவாக்கி, இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த பிளேக் வெடித்தால், ஒரு இரத்த உறைவு உருவாகிறது. இது மாரடைப்பை ஏற்படுத்துகிறது. இன்றைய காலகட்டட்தில் இதயம் தொடர்பான நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அவற்றில் மாரடைப்பு மிகவும் தீவிரமான நோயாக பார்க்கப்படுகின்றது. ஆரோக்கியமான இதயத்தின் அறிகுறிகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளளலாம்.
ஆரோக்கியமான இதயத்தின் அறிகுறிகள்
சீரான இரத்த அழுத்தம்:
உங்கள் இரத்த அழுத்தம் சீராக இருந்தால், அது பாதுகாப்பான இதயத்தின் அறிகுறியாகும். ஆரோக்கியமான இதயம் கொண்டவர்களின் இரத்த அழுத்தம் BP 120/80 mmHg இருக்க வேண்டும்.
உடல் திடம்:
உடலில் எப்போதும் போதுமான ஆற்றல் இருந்து. உடல் திடமாக இருந்தால், இதய நோய்களில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சோர்வின்றி வேலை செய்வது ஆரோக்கியமான இதயத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக, உங்கள் இதயத்திற்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் சப்ளை நன்றாக இருக்கும்.
கொலஸ்ட்ரால் அளவு:
ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருந்தால், அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். சிறந்த கொலஸ்ட்ரால் அளவு 100 mg/dl மற்றும் 60 mg/dl க்கும் அதிகமாகக் கருதப்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எடை கட்டுப்பாடு:
உடல் எடை கட்டுக்குள் இருந்து, உடலில் அதிக கொழுப்பு சேராமல் இருந்து, கெட்ட கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருந்தால், அது இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறியாகும். ஆரோக்கியமான எடையை பராமரிப்பது இதயத்தின் தமனிகளை சுத்தமாக வைத்திருப்பதோடு இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது.
மார்பு வலி:
மாரடைப்பின் பொதுவான அறிகுறி மார்பில் ஏற்படும் வலி. மார்பு வலி பிரச்சனை உங்களுக்கு இல்லை என்றால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். மார்பு வலி மாரடைப்புக்கான பொதுவான அறிகுறி என நிபுணர்கள் கருதுகிறார்கள். இது மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தோன்றத் தொடங்குகிறது.