பிரபலமான சமையல் எண்ணெய்களுக்கும், குறிப்பாக இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் புற்றுநோய் பிரச்சனைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒரு ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நம் சமையலறையில் இருக்கும் மசாலா மற்றும் தானியங்கள் பல வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. ஆனால், சமையல் எண்ணெய் புற்றுநோயை அதிகரிக்கிறது என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் சமையல் எண்ணெய்?
புற்றுநோய் ஒரு கொடிய நோய் ஆகும். புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இந்த நோய் தாமதமாக கண்டறியப்பட்டால், பல சந்தர்ப்பங்களில் மரணமும் ஏற்படுகிறது. இந்நிலையில் நமது சமையலறையில் உள்ள சமையல் எண்ணெய் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அறிக்கையின்படி, Gut மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, சமையலில் பயன்படுத்தப்படும் சில எண்ணெய்கள், குறிப்பாக ஸீட் எண்ணெய்கள், புற்றுநோய் போன்ற நோய்களை அதிகரிக்கிறது. அதாவது, சூரியகாந்தி, கிரேப் ஸீட், கனோலா மற்றும் கார்ன் போன்ற ஸீட் எண்ணெய்கள் ஆகியவை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த ஆய்வானது 80 பெருங்குடல் புற்றுநோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நோயாளிகளில் அதிகளவு பயோஆக்டிவ் லிப்பிடுகள் காணப்பட்டன. அவை ஸீட் எண்ணெயின் பிரேக்டவுனால் உருவாகின்றன. 30 முதல் 85 வயதுடைய இந்த நோயாளிகளிடமிருந்து 81 புற்றுநோய் கட்டி சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டன. இதில் புற்றுநோய் கட்டிகளில் அதிக அளவு லிப்பிடுகள், ஸீட் எண்ணெய்யால் உருவாக்கப்பட்டதாக ஆராய்ச்சி காட்டுகிறது. ஸீட் எண்ணெய்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று முந்தைய ஆராய்ச்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?
இருப்பினும், ஸீட் எண்ணெயின் பிரேக்டவுனால் உருவாகும் பயோஆக்டிவ் லிப்பிடுகள், பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், புற்றுநோய் கட்டியை எதிர்த்துப் போராடுவதையும் தடுக்கிறது என்று புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஸீட் எண்ணெய்யில் ஒமேகா-6 மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் ஃபாட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளன. ஆராய்ச்சியின் படி, ஸீட் எண்ணெய்யை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் க்ரோனிக் இன்ஃபிளமேஷன் ஆனது புற்றுநோயின் வளர்ச்சியை அதிகரிக்கும். இருப்பினும், இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஸீட் எண்ணெய்யை அதிக அளவில் சாப்பிடுவது புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எனவே தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான எண்ணெயை நீங்கள் தேர்வு செய்யலாம். இவை உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.