இயற்கையான வழியில் கெரடின் மூலம் முடியை வீட்டில் இருந்தபடியே ஸ்டிரெயிட்னிங் செய்ய முடியும். இதற்காக பியூட்டி பார்லர், ஸ்பா செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
வீட்டிலேயே நம் முடியை சுலபமாக ஸ்டிரெயிட்னிங் செய்ய முடியும். இதற்காக வெண்டைக்காய்களை நாம் பயன்படுத்தலாம். 4 வெண்டைக்காய்களை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய வெண்டைக்காய்களை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன் பின்னர் அடுப்பை ஆஃப் செய்து விடலாம்.
கொதிக்க வைத்து எடுத்த வெண்டைக்காய்களை நன்றாக ஆற வைக்க வேண்டும். அதன்பின்னர், மிக்ஸியில் போட்டு கிரீம் பதத்திற்கு அரைத்து எடுக்க வேண்டும். இந்தக் கலவையை சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்டி எடுக்க வேண்டும்.
இதனிடையே, ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் சோளமாவு, கால் கப் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். இவற்றை கலந்த பின்னர், வடிகட்டி எடுத்த வெண்டைக்காய் தண்ணீருடன் சேர்க்கலாம். இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து குறைவான அளவு நெருப்பில் கலக்க வேண்டும். இதுவும் கிரீம் பதத்திற்கு வந்த பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
இந்த கிரீமை மீண்டும் ஒரு முறை வெள்ளைத் துணியில் வடிகட்டி எடுக்கவும். இதையடுத்து, ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கலாம். இவ்வாறு செய்தால் இயற்கையான கெரடின் தயாராகி விடும்.
இதனை தலையில் தேய்த்து 2 மணி நேரத்திற்கு பின்னர் குளிக்கலாம். இதன் மூலம் வீட்டிலேயே முடியை இப்படி ஸ்டிரெயிட்னிங் செய்யலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்ய வேண்டும்.