Read Time:55 Second
திங்கள்கிழமை தொடங்கப்பட்ட இயற்கை வேளாண்மைக்கான தேசியத் திட்டம், விவசாயப் பணிகளில் உரங்கள் மற்றும் ரசாயன இடுபொருட்களைச் சார்ந்திருப்பதை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை (நவம்பர் 25) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் ஒரு முழுமையான மத்திய நிதியுதவித் திட்டமாக இயற்கை வேளாண்மைக்கான தேசியத் திட்டத்தை (என்.எம்.என்.எஃப் – NMNF) தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. என்.எம்.என்.எஃப் நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை வெகு வேகமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.