இந்தியாவில் ஏழைகளின் எண்ணிகை சுமார் 41.5 கோடி குறைந்துள்ளது. இதனை வரலாற்று மாற்றம் என்று ஐநா சபை கூறியுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாடு (OPHI) ஆகியவற்றால் வெளியிடப்பட்டுள்ளது. கோவாவில் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும் அதே போல ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் வறுமை குறைந்து வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வறுமையை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. ஐநா மதிப்பீட்டின்படி, 2005-2006 மற்றும் 2019-2021-க்கு இடையில், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிகை சுமார் 41.5 கோடி குறைந்துள்ளது. இதனை வரலாற்று மாற்றம் என்று ஐநா சபை கூறியுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாடு (OPHI) ஆகியவற்றால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மாநிலங்கங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வருமை நிலை MPI மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. அதன்படிவறுமை ஒழிப்பில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக பீகார் உள்ளது. அடுத்து ஜார்கண்ட், அதனை தொடர்ந்து உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளது. இவற்றுக்கு அடுத்த இடத்தை மேகாலயா பிடித்துள்ளது.
இந்நிலையில் கோவாவில் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும் அதே போல ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் வறுமை குறைந்து வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலே கேரளாவில் தான் வறுமை குறைவாக உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 0.71% மக்கள் மட்டுமே வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இதேபோல கோவாவில் 3.76%, சிக்கிமில் 3.82%, தமிழ்நாட்டில் 4.89% மற்றும் பஞ்சாபில் 5.59% வறுமை நிலவுகிறது.
நிதி ஆயோக்கின் அறிக்கையின் படி இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலமாக பீகார் உள்ளது. குறிப்பாக தாய்மார்களின் ஆரோக்கியம், கல்வி, உணவு, மின்சாரம் என எல்லாவற்றிலும் பிந்தங்கியுள்ளது.