பங்குராவைச் சேர்ந்த பெண்கள் புதிய மற்றும் புதுமையான புடவையை உருவாக்கியுள்ளர். இந்த சேலையை உருவாக்குவதற்கு மட்டுமே ஐந்து மாதங்கள் ஆகியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சேலை எந்த இயந்திரத்தின் உதவியும் இல்லாமல் வெறும் கைகளால் தைக்கப்பட்டுள்ளது. மேலும், பங்குராவைச் சேர்ந்த மாஸ்டர் ட்ரெய்னர் காவேரி பானர்ஜி, டஸ்ஸார் பட்டுச் சேலையில் 15 விதமான தையல்களைப் பயன்படுத்தி தனித்துவமான ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
யாருடைய உதவியும் இல்லாமல் தாங்கள் சொந்தக் காலில் நிற்பதை பறை சாற்றும் விதமாக, காவேரி பானர்ஜி பல பெண்களுடன் இணைந்து இந்தப் புதிய புடவைகளை உருவாக்கியுள்ளார். டஸ்ஸாரில் 15 தையல்கள் போடப்பட்ட சேலையை உருவாக்க சுமார் 7 மாதங்கள் ஆனது. கந்தா தையல், குஜராத்தி தையல், காஷ்மீரி தையல் என 15 விதமான தையல்கள் உள்ளன. இந்த சேலைக்கு ரூ.15 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு லம்பானி சேலை என்ற பெயரையும் வைத்துள்ளனர்.
இது பங்குராவில் உள்ள பெலியாடோரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் காவேரி பானர்ஜியின் தலைமையின் கீழ் சுய உதவி குழுவில் உள்ள பல பெண்களின் உதவியுடன் இந்த சேலை உருவாக்கப்பட்டது. காவேரி பானர்ஜி இந்த பொருட்கள் அனைத்தையும் அரசு நடத்தி வரும் பல்வேறு கண்காட்சிகளில் விற்பனை செய்து வருகிறார். இருப்பினும், இந்த சேலைக்கு அதிகமான தேவை இருந்த போதிலும், தங்களால் வழங்க முடியவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
சேலை தைக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் இருந்த போதிலும் இளம் பெண்களுக்கு யாருடைய தயவும் இல்லாம் சொந்தக் காலில் முன்னேறும் பாதையைக் காட்ட வேண்டும் என்ற ஆசையில் இப்படிப்பட்ட வேலையைத் தொடங்கினார் காவேரி பானர்ஜி. பெலியடோரின் பல இளம் பெண்களும் நீண்ட காலமாக கைகளால் புடவைகளை உருவாக்கி வருகின்றனர். ரிவர்ஸ் காந்தா, லாம் பானி, காஷ்மீரி மற்றும் குஜராத்தி கலவை போன்றவை ரொம்பவும் பிரசித்தம்.
இந்த சேலைகள் யாவும் ஆர்டர் கிடைத்தவுடன் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. வருடத்தின் பாதி நாட்கள் புடவை உருவாக்குவதற்கே சரியாய் போகிறது. நாளுக்கு நாள் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக இயந்திரங்கள் இல்லாமல் கையால் நெசவு செய்ய போதுமான சவால்களை எதிர்கொண்டு வருகிறார் காவேரி பானர்ஜி.
தையல் கலையை தானே கற்றுக்கொண்டு மாஸ்டர் பயிற்சியாளராகி, மாவட்ட தகவல் மற்றும் பண்பாட்டு அலுவலகத்தின் மூலமாக பல இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தையல் திறன்களைக் கற்றுக் கொடுத்து வருகிறார். தற்போதைய டிரெண்டிற்கு ஏற்றார்ப் போல், பிற மாநிலங்களில் இருந்து சிறந்த தையல்களை பிரதியெடுத்து, சேலையில் தனித்தன்மை வாய்ந்த ஃபூயுசனை உருவாக்கி வருகிறார்