தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் சூழலில் பனிமூட்டம் காரணமாக டெல்லி NCR பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. 48 மணி நேரத்திற்கு பிறகு சமவெளிப் பகுதிகளில் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் குறையும் என வானிலை மையம் கணித்துள்ளது.
ஏற்கெனவே, மூடுபனி காரணமாக எதிர்வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். பனிமூட்டம் அதிகரித்துள்ளதால் டெல்லி என்சிஆர் பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், டெல்லி உட்பட வட இந்தியா முழுவதுமே வெப்ப நிலை மேலும் குறையும் என்றும், 24 மணி நேரத்திற்குள் மலைப்பாங்கான பகுதிகளில் கடுமையான குளிர் நிலவும் என்றும் எச்சரித்துள்ளது.