நிதியமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றியதோடு, நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்துவிட்டுச் சென்றிருப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்துவதில் முக்கிய பங்களிப்புகளைச் செய்தவர் மன்மோகன் சிங் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தவர் மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றியதோடு, நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்துவிட்டுச் சென்றிருப்பதாகவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.