நாடு முழுவதும் காலியாக உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை சிறப்பு கலந்தாய்வு மூலம் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் நிரப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் காலியாக உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை சிறப்பு கலந்தாய்வு மூலம் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் நிரப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளை பயில நீட் நுழைவுத் தேர்வு மூலம் தகுதி பெற்ற மாணவர்கள் கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால் நடப்பாண்டில் பல தனியார் கல்லூரிகளில் ஓரிரு மருத்துவ மாணவர்கள் காலியிடங்கள் உள்ளதாகவும் இதனால் கணிசமான நீதி பற்றாக்குறையை சந்திப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள், பி.ஆர்.கவாய் கே.வி விஸ்வநாதன் அமர்வில் நடைபெற்றது. அதில், நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில் விலை மதிப்பற்ற மருத்துவ படிப்பு இடங்களை வீணடிக்காமல் நிரப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நடப்பாண்டு டிசம்பர் 30ம் தேதிக்குள் சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நடத்தி காலியாகவுள்ள மருத்துவ இடங்களை நிரப்ப வேண்டும் எனவும், கல்லூரி நிர்வாகம் தன்னிச்சையாக மருத்துவ சேர்க்கையை நடத்தக் கூடாது.
ஆனால், அரசின் மூலமாக மருத்துவ சேர்க்கையை நடத்திக் கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை 5 சுற்று கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில், இன்னும் பல மருத்துவ கல்லூரிகளில் காலியிடங்கள் உள்ளதால் அதனை சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்பு வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என குறிப்பிட்ட நீதிபதிகள் காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சிறப்பு கலந்தாய்வில் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.