
ஜம்மு காஷ்மீரின் ரஜவ்ரி மாவட்டத்தில் பாதல் என்ற கிராமத்தில் மர்மமான முறையில் அடுத்தடுத்த உயிரிழப்புகள் ஏற்பட்டதால் அந்த பகுதி தனிமைபடுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த கிராமத்தில் 3 குடும்பங்களில் மட்டும் அடுத்தடுத்து 17 பேர் உயிரிழந்தனர். பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாதல் கிராமத்தில் அண்மையில் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆய்வு செய்தார். வைரஸ் அல்லது பாக்டீரியா பாதிப்பும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
17 பேர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி உயிரிழப்புகளுக்கான காரணத்தை அறிய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.