Zomato தரப்பில் இருந்து வெளியான தரவுகளின்படி, புத்தாண்டு தினத்தன்று உணவு டெலிவரி ஆப்பில் 4,940 பேர் காதலியை தேடி உள்ளனர். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. Zomato, Swiggy போன்ற ஆன்லைன் தளங்கள் பல ஆபர்களை வழங்கி வருவதால் ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் உணவகங்களில் உள்ள உணவுகளை மக்கள் அதிகம் ஆர்டர் செய்கின்றனர். அதற்காக இத்தகைய ஆப்ஸை அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.
பண்டிகை நாட்களில் ஆர்டர்கள் அதிகளவில் இருக்கும். அதேபோல தான் புத்தாண்டு தினத்தன்று, கொண்டாட்ட மனநிலையில் அதிகமாக உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர்.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று Zomatoவின் உணவு டெலிவரி செய்யும் ஆப்பில் அதிகமானோர் அதாவது சுமார் 4,940 பேர் தங்களது காதலியைத் தேடி உள்ளனர்.
புத்தாண்டு தினத்தன்று ஒருபடிக்கு மேலே சென்று சிலர் தங்களது மணப்பெண்ணை தேடி உள்ளனர். girlfriend மற்றும் dulhan என்று Zomatoவின் ஆப்பில் தேடி உள்ளனர்.