Read Time:1 Minute, 12 Second
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றது. இதில், குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல நிலைகளில் தேர்வு நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2,327 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ம் தேதி வெளியாகி ஜூலை 19 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது. . இந்த தேர்வுக்கு தமிழக முழுவதும் மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.40 பேர் மட்டுமே தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.