Read Time:1 Minute, 16 Second
தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்றும் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.
இந்திய ரயில்வே பணிக்கான குரூப் டி பிரிவில் 32,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரயில்வே துறையில் டிராபிக் பாயிண்ட்ஸ்மேன், டிராக் மெயிண்டனர், மெக்கானிகல் அஸிஸ்டண்ட் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 35,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயது உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் படிகள் எல்லாம் சேர்த்து மாத ஊதியமாக ரூ. 25,380 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.