விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை பற்றிய அறிவிப்பு ஒன்று நேற்று வெளியானது. தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கும் நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். தன் தந்தை விஜய்யை போல ஒரு நடிகராக இல்லாமல் தாத்தா எஸ்.ஏ சந்திரசேகரை போல ஒரு இயக்குனராக சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் சஞ்சய்.
லைக்காவின் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் தன் முதல் திரைப்படத்தை இயக்குவதாக கடந்தாண்டே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு இப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. இருப்பினும் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் படத்தின் கதைக்களம் பற்றியும், அவர் படத்தில் ஹீரோவாக யார் நடிப்பார் என்பது பற்றியும் பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தன.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தான் ஜேசன் சஞ்சய் படத்தில் ஹீரோவாக நடிப்பார் என சொல்லப்பட்டது. அதன் பிறகு விஜய் சேதுபதி, கவின், சூரி, அதர்வா என பல நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன. பலரும் பல காரணங்களால் ஜேசன் சஞ்சய்யின் படத்தில் நடிக்கமுடியாமல் போனது. இருந்தாலும் சஞ்சய் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தார்.
ஒருகட்டத்தில் இப்படம் லைகா நிறுவனத்தால் கைவிடப்பட இருப்பதாக கூட வதந்திகள் பரவின. ஆனால் அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. அந்த தகவல் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமன் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும், சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வந்துள்ளது. மேலும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தெரிகின்றது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரி ஒன்றை போட்டுள்ளார்.
ஜேசன் சஞ்சய்யை வரவேற்று அட்லி இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. விஜய்க்கு ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இயக்குனராக மட்டுமல்லாமல் அவரின் தம்பியின் ஸ்தானத்தில் உள்ளார் அட்லி. இதையடுத்து விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் தன் முதல் படத்தை இயக்குகிறார் என்றதும் அட்லி அவருக்கு மனதார வாழ்த்துக்களை கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் சந்தீப் கிஷன் இப்படத்தை பற்றி மிகவும் உயர்வாகவும் பாஸிட்டிவாகவும் பேசியுள்ளார். ஆக்ஷன் என்டர்டைனராக இப்படம் உருவாக இருப்பதாக தெரிவித்த சந்தீப் கிஷன் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஜேசன் சஞ்சய் தனக்கு கதை கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரின் முதல் படத்தில் ஹீரோவாக நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் சந்தீப் கிஷன்.