நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ நாளை வெளியாகிறது.
இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் டீசரை இன்று வெளியிடுவதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதில் நயன்தாரா கையில் உலக்கை வைத்து இருக்க அவருக்கு முன் பெரிய ரவுடிகள் இருப்பது போல காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் மற்றும் மூவிவெர்ஸ் இந்தியா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் இதற்கு முன் இமைக்கா நொடிகள், யானை, திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள்களை பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.