சிலர் கண்ணாலேயே நடிப்பாங்கன்னு சொல்லுவோம்… அந்த வார்த்தைக்கு பொருத்தமானவரு ஃபஹத் ஃபாசில்… மலையாள சினிமாவோட முக்கிய ஹீரோவான இவரு, இப்போ PAN INDIA சினிமாவோட முன்னணி நடிகரா இருக்காரு…விக்ரம்-ல அமர்… மாமன்னன்-ல ரத்னவேலுவா தமிழ் ஆடியன்ஸ் கிட்ட REACH ஆனவரு… எந்த கேரக்டரா இருந்தாலும், அதோட எமோஷன் குறையாம நடிக்கிறதுதான், இவரோட ஸ்பெஷல்… சுருக்கமா சொல்லனும்னா, ஒவ்வொரு படத்துலயும் அந்த கதாபாத்திரமாவே வாழ்வாரு.
இப்படிப்பட்ட ஒரு நடிகர, புஷ்பா 2 படத்துல காமெடி பண்ணி வச்சிருக்கறதால, FAFA-வோட FANS எல்லாம் SAD BGM வச்சு STORY போட்டுட்டு இருக்காங்க…பெரிய பட்ஜெட்ல உருவாகுற மாஸ் ஹீரோ படங்களுக்கு, வில்லன்கள் ரொம்பவே முக்கியமானவங்க…
க்ளைமேக்ஸ்ல ஹீரோ எப்படியும் ஜெயிப்பாருன்னு தெரியும்… ஆனா, ஹீரோவ ஜெயிக்க விடாம தடுக்குறதுக்கு, வில்லன் செய்யுற விஷயங்கள்-தான் படத்தை விறுவிறுப்பாக்கும்… அதுக்காகதான் பெரிய படங்கள்ல வில்லன் தேர்வு ரொம்ப முக்கியமானதா இருக்கும்… அப்படி பார்த்தா, புஷ்பா படத்துக்கு ஃபஹத் ஃபாசில் CORRECT CHOICE-தான்… ஏன்னா, முதல் பாகத்துல புஷ்பா சும்மா கெத்தா இருப்பாரு…
அவர் யாருக்கும் பயப்பட மாட்டாரு, யாருக்கும் அடங்கியும் போகமாட்டாரு… புஷ்பா எப்போ என்ன செய்வாருன்னே யாராலயும் கணிக்க முடியாது… அந்த கேரக்டருக்கு TOUGH குடுக்க வந்தவருதான், ஃபஹத் ஃபாசில்… புஷ்பாவ போலவே கோவம், பழிவாங்குற வெறி, திமிரோட ஃபாசில் நடிச்ச ஷெகாவத் கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கும்…
ரெண்டு பேருக்கும் இடையில நடக்குற அந்த EGO WAR-அ பாக்குறப்போ, அவ்வளோ INTERESTING-அ இருக்கும்… முதல் பாகத்துல தன்னை அவமானப்படுத்துன அல்லு அர்ஜுன பழிவாங்குற நேரத்துக்காக காத்திருக்காரு, ஃபஹத்.. அந்த POINT-அ தான் ரெண்டாவது பார்ட்டுக்கு LEAD-ஆ குடுத்திருப்பாங்க… அல்லு மேல கொலவெறியில இருக்குற ஃபஹத், அவர என்ன பண்ணப் போறாருன்னு செகண்ட் பார்ட் பாத்த பல பேர், டைரக்டர் மேல கொல வெறியாகிட்டாங்க… ஏன்னா? புதுசா ட்ரை பண்றேன்னு சொல்லி, ஃபஹத் கேரக்டர்ல கொஞ்சம் காமெடிய MIX பண்ணி இருக்காரு டைரக்டர், சுகுமார்…
ஆனா, அது செட் ஆகாம போனதுதான், பங்கம் ஆயிடுச்சு.. வில்லன் பக்கம் WEIGHTAGE இருக்க சீன்ல எல்லாம், பஹத் செஞ்ச DARK COMEDY ஒட்டவே இல்ல… பல இடங்கள்ல ஆடியன்ஸுக்கு சிரிப்பும் வரல… ‘ஏங்க இப்படின்னு’ கேக்குற மாதிரி தான் இருந்தது… தான் தோக்குறப்போ உச்சகட்ட கோபத்துல இருக்க ஒரு ஆளு, அடுத்த நொடியே நகைச்சுவைன்னு சொல்லி பண்ற விஷயங்கள் கொஞ்சம் எரிச்சலாதான் இருந்துச்சு..