அண்மையில் மலையாளத்தில் ரிலீசான ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தின் தமிழ் வெர்ஷன் இந்த வாரம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.
ஓடிடி ரிலீஸ் ஆன படங்களின் தொகுப்பு :
கிஷ்கிந்தா காண்டம்
க்ரைம் திரில்லர் படங்களுக்கு பெயர் போன மலையாளத்தில் சமீபத்தில் கிஷ்கிந்தா காண்டம் என்ற வெளியாகி இருந்தது. விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த்து. இந்தப்படம் இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதன் தமிழ் வெர்ஷன் ‘கிஷ்கிந்தா காண்டம்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா
நயன்தாராவின் ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான ’லைன் மேன்’ படம் ஆஹா ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிறது. அதேபோல் நாசர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆனது ‘விவேசினி’ ஆஹா ஓடிடி தளத்திலும், ராக்கெட் டிரைவர் படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியிலும் ரிலீஸ் ஆகிறது.
பாகீரா
கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ’பாகீரா’. சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் பாணியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதே போல் , ‘மார்ட்டின்’ என்ற கன்னட படமும் ப்ரைம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது.
நிறங்கள் மூன்று
அதே போல் இந்த வாரம் திரையரங்குகளிலும் பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நிறங்கள் மூன்று என்ற படம் ரிலீஸ் ஆகியுள்ளது. கார்த்திக் நரேனின் கம்பேக் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’, பிரபுதேவாவின் ‘ஜாலியோ ஜிம்கானா’ மற்றும் பராரி, பனி, ஜிப்ரா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.