ஏ.ஆர்.ரஹ்மானின் விவாகரத்து பற்றி தவறாக பேசுபவர்களுக்கு நெத்தியடி கொடுத்திருக்கிறார் வழக்கறிஞர் வந்தனா ஷா.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும், மனைவி சாய்ரா பானுவும் பிரிந்துவிட்டார்கள். கணவரை விவாகரத்து செய்வதை தன் வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு அறிவித்தார் சாய்ரா பானு. அந்த அறிவிப்பு வெளியான நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவை சேர்ந்த பேஸ் கிட்டாரிஸ்ட் மோகினி டே தான் கணவர் மார்க்கை பிரிவதாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார்.
மோகினியின் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்து சிலர் ஏ.ஆர்.ரஹ்மானை அவருடன் சேர்த்து வைத்து பேசினார்கள். அதை பார்த்து ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்கள் மட்டும் அல்ல அவரின் பிள்ளைகளும் மனமுடைந்து போனார்கள். ஒரே சமயத்தில் இரண்டு விவாகரத்து அறிவிப்பு வந்தால் இப்படி பேசுவது தவறு என ரஹ்மானியாக்ஸ் தெரிவித்தார்கள். இந்நிலையில் இது குறித்து வந்தனா ஷாவிடம் கேட்கப்பட்டது.
வந்தனா ஷா கூறியதாவது:-
,ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன்.நான் ரஃபேல் நடாலின் தீவிர ரசிகை. நாளை ரஃபேல் நடால் தன் விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார் என வைத்துக் கொள்வோம். இங்கே வந்தனா ஷா தன் விவாகரத்தை அறிவிக்கிறார். இந்த இரண்டு விவாகரத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என மக்கள் கேட்டால் அது ரொம்ப மோசமானது. இது போன்ற வதந்தி கண்டனத்திற்குரியது. மோகினி தற்போது வேதனையில் இருப்பார். அவரின் கணவரும் வேதனையில் இருப்பார். அதனால் இது போன்ற வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்றார்.
சமூகத்தில் முக்கியமான பலருக்கு ஒரே நேரத்தில் விவாகரத்து நடக்கிறது. அதனால் அதற்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என நினைக்கக் கூடாது என முன்பு தெரிவித்தார் வந்தனா. அவர் தற்போது ரஹ்மான் பற்றி கூறியிருப்பதை ரசிகர்கள் வரவேற்கிறார்கள். ஏற்கனவே குடும்பம் பிரிந்த வேதனையில் இருக்கிறார் இசைப்புயல். இந்த நேரத்தில் அவரை பற்றி தவறாக பேசி மேலும் வேதனை அடையச் செய்ய வேண்டாம் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
என் தந்தை குழந்தை போன்றவர். அவரை பற்றி தவறாக பேச வேண்டாம் என இன்ஸ்டாகிராமில் உருக்கமாக போஸ்ட் போட்டார் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன். ஏ.ஆர். ரஹ்மான் வாழ்க்கையில் துயரமான நேரம் இது. இது போன்ற நேரத்தில் அவரின் கேரக்டரை பற்றி யாரும் கண்டபடி பேசாதீர்கள். விவாகரத்து என்றதும் நீங்களாக எதையாவது யூகித்து பேச வேண்டாம் என்பதே ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களின் கோரிக்கை ஆகும்