ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அட்லி, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார்.
இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார். இதையடுத்து அவர் சலமான் கானை வைத்து படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதற்கிடையில் அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளார். அந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.