
Read Time:1 Minute, 16 Second
நடிகர் அஜித்குமார் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அஜித்துக்கு பைக் மீது இருக்கும் ஆர்வத்தை பார்க்கும் போது, தனது ஆசை மீதும் ஏதாவது செய்ய வேண்டுமென தோன்றியதாகவும்,அஜித்குமார் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
அவருக்கு பிடித்ததை செய்ய நேரம் ஒதுக்குகிறார் என்றும், அவரை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். அஜித்துடன் மஞ்சு வாரியர் இணைந்து துணிவு படத்தில் நடித்திருந்தார். அஜித்தைத் தொடர்ந்து மஞ்சு வாரியரும் பைக்கில் நெடுந்தூரம் சென்று , புகைப்படங்களை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.