தன்னைப் பற்றிய அவதூறாகவும் வதந்திகளையும் பரப்பி வரும் சிலரை மூன்று குரங்குகள் என்று கூறி நயன்தாரா விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாரா சமீபத்தில் அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களை கூறியுள்ள நிலையில், தன்னை பற்றி அவதூறு பரப்பும் மூன்று நபர் குறித்து சாட்டையடி பதில் கூறியுள்ளார். அந்த நபர்கள் வெளியிடும் 50 வீடியோக்களில் 45 வீடியோக்கள் என்னைப் பற்றிதான் செய்தி இருக்கும் என்றும், என்னைப் பற்றி பேசுவதால் அவர்களுக்கு வருமானம் வருகிறது என்பதால் அவ்வாறு அவதூறாக பேசுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு ’நல்லதை கேள், நல்லதை பார், நல்லதை பேசு’ என்ற மூன்று குரங்குகள் தான் ஞாபகம் வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், இந்த மூவர் நல்லதை கேட்காமல், நல்லதை பார்க்காமல், நல்லதே பேசாமல் இருக்கின்றனர் என்றும், இதை பெரிதுபடுத்தாமல் அப்படியே கடந்து விடுவதால் நல்லது என்றும் அவர் கூறினார்.”என்னைப் பற்றி எல்லாம் தெரிந்தது போல் அவர்கள் பேசுவார்கள்,” என்றும், என்னுடைய அப்பா போல கூடவே இருந்தது போல் அவர்கள் பேசுகிறார்கள். என்னைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?” என்று அவர் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார். இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.