சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 70 களில் இருந்தாலும் இப்போதும் இளம் நடிகர் போல சுறுசுறுப்பாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ‘வேட்டையன்’ ரிலீஸான நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது ஷூட்டிங் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கைவிட்டுவிடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.