Read Time:39 Second
நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ஜான் மகேந்திரனின் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் தான் சச்சின். குறும்பான காதல் காட்சிகள், வடிவேலுவுடனான காமெடி, தேவிஸ்ரீ பிரசாத்தின் அசத்தலான பாடல்கள் என்று, பலரையும் ஈர்த்த இப்படம் வெளியாகி வரும் ஏப்ரல் மாதத்துடன் 20 ஆண்டுகள் ஆகவுள்ளது.