Read Time:1 Minute, 0 Second
சின்னத்திரையில் பிரபல நடிகர் நேத்ரன் மரணமடைந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பொன்னி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருப்பவர் யுவன்ராஜ் நேத்ரன். அவரது மனைவி தீபா முருகனும் பிரபல சீரியல் நடிகை தான்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதியானதும் அதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று யுவன்ராஜ் நேத்ரன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவு சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.