ஜியோ நிறுவனத்தின் செயலிகள் தேசிய அளவில் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேசன்களாக உள்ளது. இந்திய ஓடிடி தளத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கும் பல சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த HBO Max கண்டெண்டுகள் மற்றும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை உள்ளிட்டவை ஜியோவுக்கு மாற்றப்பட்டது. இதனால் ஹாட்ஸ்டாரின் சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
இந்நிலையில் டிஸ்னி நிறுவனத்துடன் ஜியோ மேற்கொண்ட புதிய ஒப்பந்தத்தால் இந்தியாவில் வால்ட் டிஸ்னியின் கண்டெண்டுகளை ஜியோ ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ளதால், டிஸ்னி ஹாட்ஸ்டார் மொத்தமாக ஜியோவுடன் இணைக்கப்படுகிறது. இந்த புதிய இணைவுக்கு Jio Hotstar என்ற புதிய ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த பெயரில் உள்ள Domainஐ ஏற்கனவே ஒருவர் வாங்கி வைத்துக் கொண்டு அதிக விலை பேசியதாக கூறப்பட்டது.
இதனால் ஜியோ நிறுவனம் அந்த பெயரை கைவிட்டு தனது புதிய இணைவு ஓடிடிக்கு JioStar என பெயரிட்டுள்ளது. இந்த பெயரில் வலைதளமும் தயாராகியுள்ள நிலையில், விரைவில் இந்த பெயரில் ஆண்ட்ராய்டு, iOS உள்ளிட்டவற்றிற்கு செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.