பிக்பாஸ் நிக்ழ்ச்சியை கமல்ஹாசன் மீண்டும் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை விலகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கமல் ஹாசனை தொடர்ந்து விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அறிக்கபப்ட்டது. விஜய் தொலைக்காட்சியில் பெரும் பொருள் செலவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்களையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இதற்காக கமல் ஹாசனுக்கு ரூ.150 கோடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கத் தொடங்கினார். மேலும் அதனை சிறப்பாகவும் விஜய் சேதுபதி கையாண்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் வந்த போட்டியாளர்கள் சிலர் எலிமினேஷனில் வெளியேறிய நிலையில் சமீபத்தில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக ஐந்து பேர் வீட்டிற்குள் வந்தனர். ஆனால் அவர்களில் ரியா மற்றும் வர்ஷிணி இருவரும் வந்த வேகத்திலே வெளியேறினர்.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் போட்டியில் வார இறுதி நாள்களில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதத்திற்காகவே அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தனர். எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாகவும் இயல்பாகவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் பாணி பலரைக் கவர்ந்துள்ளது.
ஆனாலும் கமல் ஹாசனின் பாணியிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்றாலும், போட்டியாளர்களிடம் பேசி, அவர்களின் மனநிலையை வெளிப்படுத்த வைப்பதில் கமல் ஹாசன் கைதேர்ந்தவர் என்பதே ரசிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத் தலைவரான கோவை தங்கவேலு கமல்ஹாசன் மீண்டும் தொகுப்பாளராக ஆக உள்ளதாகவும் ரீஎண்ட்ரி கொடுக்கப்போவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். கமல்ஹாசன் மீண்டும் தொகுத்து வழங்க உள்ளதால் வீட்டிலுள்ள இல்லத்தில் உள்ள செல்லத்தை பார்க்கலாம் என்கிற விஜய் சேதுபதியின் வசனம் இனி அகம் டிவி வழியே அகத்திற்குள் என மாற வாய்ப்பு இருப்பதாகவும் பதிவிட்டுள்ளனர்.