சமீபத்தில் பல முன்னாள் கணவருடனான மனக்கசப்பிலிருந்து மீள முடியாத துயரத்தில் இருந்த சமயத்தில்தான் அவருக்கு மயோ சிடிசி என்னும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டார்.
தமிழ் , தெலுகு என உச்ச நட்சத்திர நாயகியாக இருக்கும் சமந்தா சமீபத்தில் பல சர்ச்சைகள், அவதூறுகளுக்கு ஆளானாலும் தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனம் கவர தவறியதில்லை. அப்படி சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான சிட்டாடெல் வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் பலரது கவனத்தை ஈர்த்தது.
.
சமீபத்தில் முன்னாள் கணவருடனான மனக்கசப்பிலிருந்து மீள முடியாத துயரத்தில் இருந்த சமயத்தில்தான் அவருக்கு மயோசிடிசி என்னும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டார்.
விளம்பரம்
பின் அதற்காக அவர் கடும் டயட் , உடற்பயிற்சி என ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறினார். அப்படி, தன் வாழ்க்கைமுறை குறித்து அவ்வப்போது பாட்காஸ்டில் சமந்தா பேசுவதும் வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் அவர் கொடுத்த ஹெல்த் டிப்ஸ் சர்ச்சைக்குள்ளானது.
மருத்துவர்கள் அவரின் குறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதையும் அவர் கூலாகவே டீல் செய்தார். தற்போது முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுக்கு பாலிவுட் நடிகையான ஷோபிதாவுடன் திருமணம் என்றவுடன் அதற்கும் சமந்தாவைதான் டார்கெட் செய்து பேசினர். இப்படி பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதையெல்லாம் அமைதியாக கடந்து வந்தவருக்கு மீண்டும் ஒரு மீள முடியாத சோகம் சூழ்ந்துள்ளது.
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உயிரிழந்தார். தனது தந்தையின் மறைவு தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “Until we meet again, Dad” என பதிவிட்டுள்ளார்.
சமந்தா தனக்கு திருமணமான பின்பும் தன் அப்பாவின் பெயரை தன் பெயருக்கு பின்னால் மாற்றாமல் இருந்தார். அந்த அளவுக்கு அவர் தன் தந்தை மீது பாசமாக இருந்தார். இந்நிலையில் கணவரின் பிரிவை விட இந்த பிரிவு அவருக்கு மீளா துயரத்தை தரும் என்பதை அவரின் பதிவின் மூலம் புரிந்துக்கொள்ள முடிகிறது.
சமீபத்தில் கூட நேர்காணல் ஒன்றில் சமந்தா தனது தந்தையைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். சமந்தாவின் திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் பலரும் அவரது தந்தை இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.